About Us

About Us

உங்களுக்காக நாங்கள் இருக்கின்றோம் வருந்தவேண்டாம்
உங்கள் மகன் அல்லது மகள் வரங்களை எங்கள் இணையதளத்தில் பதிவு செய்யுங்கள்
நல்ல வரன் அமைய ஆண்டவனையும், அம்பாளையும் பிராத்தித்து பதிவுசெய்யுங்கள் நல்லதே நடக்கும்
ஓம் விராட் என்பதன் அர்த்தம் 360கு க்கும் தன்பார்வையை கொண்டவர் என்று பொருள் விஷ்வம் என்றால் அனைத்தும் நானே என்று பொருள்
  கர்மா என்றால் திறமையானதை செய்யக்கூடிய திறம்படைத்தவர் என்று பொருள்
விஷ்வகர்மாவாகிய நாம் நுணுக்கமான அறிவும் தெளிவும், திறமையும் படைத்தவர்கள்
  நாம் நம் திறமைகளை வெளிப்படுத்தவும் நவீன தொழில் முறைகளை அறிமுகம் செய்யவும், நம் அனைவரையும் ஒன்று இணைத்து இந்த இணையதளம் பாலமாக அமையும் என்பது உறுதியாகும். இந்த முயற்சியின் முதல் விதைதான் இந்த இணையதளம்

திருமண தகவல் மையம்
  இந்த இணையதளத்தில் திருமண தகவல்களை பெறலாம். இதை இலவசமாக செய்யலாம் என்று கலந்தாலோசித்தபோது இலவசம் என்றால் அதற்கு ஒரு மதிப்பு இருக்காது. இதனால் இந்த இணையதளம் மிகமிக குறைந்த கட்டணத்தில் செயல்படுகிறது. நிர்வகிப்பதற்கும் மற்றும் அத்தியாவசிய செலவிற்கும் ஈடுகட்ட கட்டணம் பெறப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன் படுத்திக்கொள்ள அழைக்கின்றோம்.


விஷ்வகர்மா இ-கிளப்
  இந்த இ-கிளப்பில் தொழில் அதிபர்கள், பெரும் மற்றும் சிறு குறு வணிகர்கள், நகை தொழில் செய்பவர்கள் கல்வி நிறுவனர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், தனியார் மற்றும் அரசு நிறுவனத்தில் வேலை செய்பவர்கள், பணியில் ஓய்வுபெற்றவர்கள் அனைவரும் இந்த கிளப்பில் சேர்ந்துகொள்ளலாம்
  நமது விஷ்வகர்மா மக்கள் பலர் மிக உயர்ந்த அரசு பதவியிலும், மிக பெரிய தொழிலதிபர்களாவும் உள்ளார்கள் இவர்களை ஒன்றிணைக்கவும், ஒருவருக்கொருவர் தங்கள் கருத்துக்களை பரிமாற்றிக்கொள்ளவும் மேலும் தொழில் வளர்ச்சிக்கும், நவீன தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்யவும் இந்த இ-கிளப் உதவியாக இருக்கும்

  குறிப்பு- இந்த கிளப் தொழில் விளம்பரத்திற்காகவோ அல்லது வேறு சுயவிளம்பரத்துக்கோ பயன்படுத்தக்கூடாது